Whatsapp Status | துன்பமில்லா வாழ்க்கைக்கு வழி | Tamil Motivational Speech


வைகுண்டத்தில் இரண்டு தேவர்கள் ஸ்ரீமான் நாராயணன் மீது தாங்கள் வைத்துள்ள பக்தியில் எவருடைய பக்தி மிகவும் சிறந்தது என விவாதித்து கொண்டு இருந்தனர்.  அந்த வழியாக சென்ற நாரதர் அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே அருகில் வந்தார். அவர்கள் இருவரும் ஸ்ரீமான் நாராயணன் மீது எவ்வளவு பக்தி கொண்டிருக்கின்றனர் என்பதை விளக்கி பக்தியில் மிகச் சிறந்தவர் யார்  என கேட்டனர். நாரதர் புன்னகைத்தபடியே "எங்கும், எப்போதும், தூக்க கனவிலும், நொடிக்கு ஒரு முறை  ஸ்ரீமான் நாராயணனின் பெயரை தியானித்துக்கொண்டும் ஜெபித்துக்கொண்டும்   இருக்கும் என்னைவிட உங்கள் பக்தி சிறந்ததா?" என கேட்டுக்கொண்டே அந்த இடத்தை விட்டு புன்னகை மாறாமல் அகன்றார். இவைகளை வைகுண்டத்தில் இருந்தபடியே மனக்கண்ணால் பார்த்த ஸ்ரீமான் நாராயணன், நாரதர்க்கு ஏற்பட்டுள்ள அகங்காரத்தை அடக்கி உண்மை நிலையை புரியவைக்க வேண்டும் என தீர்மானிதுக்கொண்டர்.
          சில நாட்கள் கழித்து வைகுண்டத்திற்கு வந்த நாரதரிடம் பூலோகத்தில் உள்ள ஒரு பக்தனை காண செல்வதாகவும் உடன் நாரதரையும் அழைத்து செல்ல விரும்புவதாகவும் கூறி ஸ்ரீமான் நாராயணன் நாரதருடன் பூலோகம் வந்தார்.  பூலோகத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்து கண்ணுக்கு  புலப்படாமல் இருவரும் அமர்ந்து அவரின் தினப்பணிகள் என்னென்ன செய்கிறார் என கவனிக்க தொடங்கினர்.
        விவசாயி விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டில் மாட்டி இருந்த சுவாமி நாராயணனின் படத்தை பார்த்து  கை தொழுதவாறே "நாராயணா" என கூறிக்கொண்டு நிலத்திற்கு மாடுகளை ஓட்டி சென்று ஏர் உழுது, வயலுக்கு நீர் பாய்ச்சி விவசாய வேலைகளை செய்துகொண்டிருந்தான். எட்டு மணிக்கு அவனது மனைவி கொண்டு வந்த பழைய சாதத்தை கையில் வாங்கி ஒரு முறை நாராயணா என கூறிவிட்டு சாப்பிட்டு முடித்துத் தன் உழவுப்பணிகளை தொடர்ந்தான்.   பின் மதியம் அவன் மனைவி கொண்டுவந்த கூழை பெற்று நாராயணா என கூறிய வாறே குடித்து முடித்தான். உழவு முடித்து இரவு வீட்டிற்கு வந்த அவன் உன்ன உணவு எதுவும் இல்லாத நிலையில், பாயில் அமர்தவரே நாராயணா என கூறிக்கொண்டு படுத்து உறங்கினான்.
        விவரசாயி வீட்டிலிருந்து இருவரும் வெளியே வரும் போது நாரதர், சுவாமி நாராயணனிடம் "ஒரு நாளைக்கு வெறும் நன்கு முறை உங்கள் பெயரை சொல்லும் இவனை பார்க்கவா இவ்வளவு ஆர்வத்துடன் வந்தீர்கள்" என கேட்டார். அதற்க்கு சுவாமி நாராயணர் "நீ பதில் அறியும் முன் இந்த எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அங்கே உள்ள அந்த மரத்தை பத்து முறை சுற்றி விட்டு வா. ஒரு துளி எண்ணெயும் கீழே சிந்தக்கூடாது" என கூறி அனுப்பி வைத்தார்.