பெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக தீர்த்து விடும் நாம் தான் இந்த சின்ன தொப்பை மற்றும் உடல் எடை சார்ந்த பிரச்சினைகளை பெரிய அளவில் எடுத்து கொள்கிறேன். தொப்பை என்கிற பெயரை சொன்னாலே சிலருக்கு ஏதோ பெரிய வியாதியை போல தோன்றுகிறது. ஆனால், உண்மையில் இவை மிக சிறிய ஒன்று தான். இதற்கு மிக விரைவிலே தீர்வையும் நம்மால் கண்டறிய முடியும்.

ஒரு சில பயிற்சிகள், ஆரோக்கியமான டயட் உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சினைக்கு கூடிய விரைவிலே தீர்வு கட்டி விடலாம். இதே பயிற்சிகளை தான் நம் முன்னோர்களும் கடைபிடித்து வந்தார்கள். எப்படிப்பட்ட பயிற்சிகளின் மூலம் உடல் எடை மற்றும் தொப்பையை 4 வாரங்களில் குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பயிற்சி #1 
இது மிகவும் எளிமையான பயிற்சி முறை தான். இதை செய்வதற்கு முதலில் எழுந்து நின்று கால்களை அகற்றி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து, முதுகை முன்னோக்கி சாய்த்த படியே தரைக்கு அழுத்தத்தை கொடுக்கவும். கிட்டத்தட்ட நாற்காலி போன்ற நிலையில் 2 நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பயன்கள் 
இந்த பயிற்சி முறையை செய்து வருவதால் முதுகு எலும்பு பாதிக்கப்படாமல் நீண்ட காலம் வலிமையாக இருக்கலாம். மேலும், கால், முதுகு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் இனி உங்களுக்கு வலியும் ஏற்படாது.

பயிற்சி #2 
இரண்டாவது பயிற்சியை ஆரம்பிக்க முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து கால் விரல்களின் நுனி பகுதியைதரையில் படும்படி வைத்து கொண்டு, கைகளை 90 டிகிரியில் தரையில் அழுத்தம் தரும் படி வைக்க வேண்டும்.இந்த நிலையில் 1 முதல் 3 நிமிடங்கள் இருப்பது அவசியம்.

பயன்கள்
இவ்வாறு செய்வது உடல் முழுக்க ஆரோக்கியத்தை தரும். தொப்பையை குறைப்பதோடு உடல் எடையையும் இந்த பயிற்சி குறைத்து விடும். மேலும் கை, கால், தசை பகுதி, போன்ற பலவித உறுப்புகளும் வலிமை பெற்று விடும். நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இந்த பயிற்சி முறை உங்களுக்கு உதவும்.

பயிற்சி #3 
இந்த பயிற்சியானது பறவை மற்றும் நாயின் கோணத்தில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் முட்டி போட்டு கொண்டு, அதன் பின் ஒரு காலை மட்டும் பின்னோக்கி நீட்டி கொள்ள வேண்டும். இந்நிலையில் கைகளை தரையை நோக்கி அழுத்தம் கொடுத்த படி இருக்க வேண்டும். பிறகு ஒரு கையை மட்டும் நேராக நீட்ட வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இடது வலது என கை, மற்றும் கால்கள் மாறி இருக்க வேண்டும்.

பயன்கள் 
இது மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை தொடர்ந்து செய்து வருவதால் உடல் வலு பெறும். மேலும் தசைகள், எலும்புகள் போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உடல் எடையை குறைக்கவும், தொப்பையின் பாதிப்பு இல்லாமல் வாழவும் இந்த பயிற்சி முறை உதவும்.

பயிற்சி #4
இது பலருக்கும் தெரிந்த பயிற்சி முறை தான். அதாவது ஆங்கிலத்தில் புஷ் அப் என்று கூறுவார்கள். குப்பற படுத்து கொண்டு உடலை மேல் நோக்கி எழுந்தும், தரையில் படும்படியும் தொடர்ந்து செய்து வருவதே இந்த பயிற்சியாகும். இந்நிலையில் கை மற்றும் கால்களை தரையை நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பயன்கள் 
தொப்பையை குறைக்க மிக சிறந்த பயிற்சி இது தான். தினமும் 10 முதல் 20 புஷ் அப்ஸ்களை செய்து வந்தால் தொப்பை பிரச்சினைக்கு பாய் பாய் சொல்லி விடலாம். அத்துடன் உங்களின் உடல் எடையையும் குறைத்து விடலாம். மேற்சொன்ன பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் மட்டுமே 4 வாரங்களில் உடல் எடை மற்றும் தொப்பைக்கு தீர்வு கட்ட இயலும்.